தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பல்வேறு கட்டங்களாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று ஏழாம் கட்டமாக 6 கழக மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை X தளத்தில் வெளியிட்ட விஜய், புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.