மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாங்கள் மராத்தியை மதிக்கிறோம், ஆனால் அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் எந்த மொழியையும் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம்" என்றார். முன்னதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடைக்காரர் ஒருவர் மராத்தி மொழியில் பேசவில்லை என அவரை தாக்கினார்கள்.