மேற்குவங்க சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 10) பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்த தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் நாம்தான். இந்த தாக்குதலில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் நாம் அதை ஆதரிப்பது இல்லை" என்று கூறியுள்ளார்.