நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம் என்று ஒடிசா முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், ஒடிசாவில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமல்ல என தெரிவித்தார்.