தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஈரோட்டில் இன்று(ஜூன்.11) நடந்த அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர், தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தோம். தற்போது வரை 1.84 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிரச்னை என வந்தால் முதல் ஆளாக துணை நிற்பவர்கள் நாங்கள் என்றார். முதல்வர் மறைமுகமாக இபிஎஸ்-யே சாடினார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.