“3.36 கோடி பக்தர்களின் பசியாற்றி வருகிறோம்” - முதலமைச்சர் தகவல்

63பார்த்தது
“3.36 கோடி பக்தர்களின் பசியாற்றி வருகிறோம்” - முதலமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்குவது குறித்த தகவல்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் நாள் முழுவதும் 11 கோயில்களிலும், ஒருவேளை 760 கோயில்களிலும் அன்னதானம் வழங்கி, ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்களின் பசியாற்றி வருகிறோம். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கள்ளழகர் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று விரிவுபடுத்தியுள்ளோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி