கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம் வயநாட்டில் கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.