வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு

79பார்த்தது
வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மீட்பு பணியானது 6ம் நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும், பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி