வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 240 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாநில, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், காவல்துறை இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.