வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 23 பேர் குழந்தைகள். இயந்திரங்கள் மூலம் காணாமல் போனவர்களை தேடும் பணி இன்றும் தொடர்கிறது. முண்டகையில் நேற்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலம்பூரில் உள்ள சாலியாறு ஆற்றின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. நிலம்பூர், பொதுக்கல் மற்றும் முண்டேரியில் இதுவரை 152 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.