வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 2 நாட்களில் 1,592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். வயநாடு மாவட்டத்தில் 8,000 பேர் 82 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்த 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 166 பேரின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.