கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 238ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்களில் பல்வேறு சடலங்கள் கண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சாலியார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டோரின் சடலங்கள், நிலச்சரிவு நடந்த மேப்பாடி பகுதிக்கு அடையாளம் காண ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. தொடர்ந்து, அங்கு பேரிடர் மீட்புப் படை குழுக்களும், முப்படைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.