வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உருக்குவதாக நடிகர் சூர்யா உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தனது பிரார்த்தனைகளும், எண்ணங்களும் வயநாடு குடும்பங்களுடன் உள்ளது என கூறியுள்ளார். மீட்புப் பணிகளில் அங்குள்ள குடும்பங்களுக்கு உதவிய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள மக்களுக்கும் தன்னுடைய மரியாதைக்குரிய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.