தாம்சன் நிறுவனம் 10 கிலோ கொள்ளளவு கொண்ட செமி ஆட்டோமெடிக் டாப் லோடு வாஷிங்மெஷினை அக்வா மேஜிக் கிராண்டே சீரிஸ் வரிசையில் வடிவமைத்துள்ளது. தண்ணீரின் அளவை அறிய அளவீடுகளும் இதில் இடம் பெற்றுள்ளதால் 25 சதவீதம் வரை நீரை சேமிக்க வழிவகுக்கும். துணி துவைப்பதற்கு செலவாகும் டிடர்ஜெண்ட் பவுடரின் தேவையிலும் 30 சதவீதத்தை மிச்சப்படுத்தி கொடுக்கும். புதுமையான 3டி ரோலர்கள் தொழில்நுட்பம் கொண்ட இதன் விலை ரூ.10,999.