கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று (ஜூன் 01) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெஞ்சாணி, சிற்றார் 1, 2 அணைகளில் இருந்து இன்று முதல் 28-02-2026 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஆணையிட்டுள்ளது.