மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு.. டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

64பார்த்தது
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு.. டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து இன்று (ஜூன் 4) காலை 113 அடியை நெருங்கியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பை யாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,234 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி