நீலகிரி, கோவை மாவட்டத்தில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த பருவமழைக்கு பின்னர் கோவையில் உள்ள கவி அருவியில் நீர்வரத்து தற்போது ஏற்பட்டுள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்து காரணமாக சுற்றுலாபயணிகளும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.