12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளரின் மகன் ராகுல் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார். மாணவருக்கு இன்று தவெக சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் தங்க மோதிரம் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பரிசை பெற்றுக்கொண்ட மாணவரும், அவரின் குடும்பத்தினரும் விஜய்க்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.