கேரள மாநிலத்தில் இருந்து மீண்டும் லாரிகளில் கழிவுகளை ஏற்றி வந்த இருவர் கன்னியாகுமரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். களியக்காவிளை சோதனை சாவடி வழியாக குமரி மாவட்டத்திற்குள், நெல்லையை சேர்ந்த மணிகண்ட தேவா, வள்ளி முருகன் ஆகியோர் இன்று (டிச. 23) நுழைந்த போது போலீஸில் சிக்கினார்கள். தொடர்ந்து மனித கழிவுகளை சேகரித்து எடுத்து செல்லும் செப்டிக் டேங்க் வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.