கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வெப்பநிலை உலக நாடுகளில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸிற்கு கீழே குறைப்பது என தீர்மானிக்கப்பட்டது. பல வளர்ந்த நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும், இந்த நிலை தொடர்ந்தால் பூமியின் பருவநிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் ஐநா எச்சரித்துள்ளது.