பிரபல கன்னட நடிகையும், தொகுப்பாளருமான அபர்ணா வஸ்தரே நுரையீரல் புற்றுநோயால் சமீபத்தில் மரணமடைந்தார். இது புகை பிடிக்காதவர்களுக்கும் பரவுகிறது. குரல் மாற்றம், சோர்வு, பலவீனம், அடிக்கடி நெஞ்சு தொற்று, மருந்து கொடுத்தாலும் குறையாத இருமல், இருமும்போது ரத்தம் துப்புதல், மூச்சுத் திணறல், தூக்கமின்மை, எடை குறைதல் போன்றவை அறிகுறிகள். முன்கூட்டியே மருத்துவரை அணுகினால், தகுந்த சிகிச்சை மூலம் இதிலிருந்து விடுபடலாம்.