மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சார்பில் போர் சூழல் ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீப்பிடித்தால் அணைப்பது, மக்களை மீட்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மக்கள் ஒத்திகையில் ஈடுபட்டு மக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.