ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு உலக சந்தைகள் எதிர்வினையாற்றியதால் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச தரநிலையான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 2.6% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 79 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை 2.6% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 75.76 டாலராகவும் உயர்ந்துள்ளது. அதே போல் அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எஸ்&பி 500 மற்றும் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரிக்கான பியூச்சர்ஸ் 0.4%, நாஸ்டாக் பியூச்சர்ஸ் 0.5% சரிந்தன.