சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி இந்தியா தண்ணீர் தரவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் என பாக்., முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ எச்சரித்துள்ளார். மேலும் அவர், "இந்தியாவுக்கு இரண்டு ஆப்ஷன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது அல்லது நாங்கள் சிந்து நதிப் படுகையில் உள்ள 5 ஆறுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம். சஸ்பெண்ட் முடிவை பின்பற்றுவோம் என இந்தியா மிரட்ட முடிவு செய்தால், நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.