உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது தூக்கம். ஆனால், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு, தினமும் ஒரே நேரத்தில் தூங்க முயற்சி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன்னர் மொபைல், டிவி போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்கவும். இரவில், காபி, டீ மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள். மேலும், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை அன்றாடம் பயிற்சி செய்தால் தூக்கத்தை மேம்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.