ஆளுங்கட்சி MLA-வை பளார் என அறைந்த வாக்காளர்.. (வீடியோ)

18833பார்த்தது
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மோதல் ஏற்பட்டது. ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(மே 13) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றது ஏன் என தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அன்னபத்துனி சிவகுமாரிடம் வாக்காளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். ஆத்திரமடைந்த அந்த வாக்காளரும் எம்எல்ஏவின் கன்னத்தில் பளார் என அறைந்ததால் பெரும் பதற்றம் வெடித்தது. எம்எல்ஏவுடன் வந்த ஆதரவாளர்களும் வாக்காளரை கடுமையாக தாக்கினர். இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி