கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஓட்டுப்பிச்சை எடுப்பது எப்படி என்று சீமானிடம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “நாங்களாவது பிச்சை எடுக்குறோம். நீங்க பிச்சு பிச்சு எடுக்குறீங்க. இஸ்லாமியர்களை எதிர்ப்பதை தவிற பாஜகவுக்கு வேறு கொள்கை இருக்கா? என வெளிப்படையாக அண்ணாமலை சொல்ல வேண்டும்” என்றார்.