இந்து மத புராணங்களின்படி, அசுரர்களாக உலகில் வாழ்ந்து வந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் போன்றோர் உலக உயிர்களையும், தேவர்களையும் துயரில் ஆழ்த்தினார்கள். அவர்களின் துயரை நீக்கி மக்களை காக்க சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி ஆறுமுகனாக முருகன் அவதரித்தார். தீயவர்களை அழித்து நல்லவர்களை காத்து தர்மத்தை நிலைநாட்ட பிறந்த முருகன் அவதரித்த விசாகம் திருநாள் வாழ்வின் தடைகளை, தீய வினைகளை அகற்றும் தன்மை கொண்டது. அந்த சக்தியை முருகன் கொண்டவரின் அருள் கிடைத்தால் அனைத்தும் நம்வசப்படும்.