விருதுநகர் அருகே அல்லம்பட்டி வாட்டர் டேங்க் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சார்பு ஆய்வாளர் கார்த்திக் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த மணிகண்டன் என்பவரை அழைத்து சோதனை செய்ததில் அவரிடம், விற்பனைக்காக 200 ரூபாய் மதிப்பிலான 20 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் இந்த கஞ்சா விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.