விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 104 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இச்சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 33, 238 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 13, 247 லிட்டர் விஆர்டி. 1000 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்;பத்தியாளர்கள் ஒன்றியம் லிட். (ஆவின்) மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அரசின் மூலம் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3/- ஊக்கத்தொகை, பால் தரத்தின் அடிப்படையில் வருடம் முழுவதும் நியாயமான விலை, கால்நடைத் தீவனம், தாது உப்பு, கால்நடைகளுக்கு விலையில்லா மருத்துவ சிகிச்சை, சங்கம் ஈட்டும் இலாபத்தில் உறுப்பினர்களுக்கு பங்கு, போனஸ், கறவை மாட்டுக் கடன் பெற உதவி (மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலமாக) மற்றும் மானிய விலையில் பால் தரப் பரிசோதனை உபகரணங்கள் ஆகியவை சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆர்வமுள்ள நபர்கள் அருகிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து பயனடையுமாறும், மேலும், சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.