திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணபிக்கலாம்

65பார்த்தது
2025 -ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https: //awards. tn. gov. in) இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ. 1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 10. 02. 2025 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேலும், 12. 02. 2025-க்குள் கருத்துருக்கள்; சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் 04562-252701 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன் தொவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி