அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சத்திர ரெட்டிய பட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் விருதுநகர் நகர செயலாளர் தோழர் காதர் முகையதீன் தலைமை வகித்தார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் பாலமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர் சக்கணன், டிஎன்எஸ்டிசி ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தோழர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் முருகேசன், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் தோழர் மாரீஸ்வரி, அகில இந்திய இளைஞர் பெருமன்ற விருதுநகர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் மாரியப்பன், வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் நாராயணசாமி, TNSTC AITUC தோழர்கள் மூர்த்தி, முனியாண்டி, மணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அரசமைப்புச் சட்டத்தையும், சமத்துவத்தையும் பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.