விருதுநகரில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு 1155 பயனாளிகளுக்கு ரூ. 5. 06 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர்கள்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் சமத்துவ நாள் விழா நிகழ்ச்சிவெகு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்.
இராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக முதல்வர் காணொலி காட்சியின் மூலமாக உரையாற்றினர். இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1155 பயனாளிகளுக்கு ரூ. 5. 06. கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சித்துறை, வருவாய், மற்றும் கூட்டுறவு துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறை களின் மூலமாக நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்கள்.
மேலும் சமூகநலன் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக மாற்று திறனாளிகளுகு மூன்று சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனத்தை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தை ஏராளமான பயனாளிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.