தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

58பார்த்தது
*விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி இன்று ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் - பங்கேற்பு. *

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊர வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில்
அனைத்து திட்ட துறையிலும் கணினிஇயக்குபவர்களுக்கு மாத ஊதியம் ரூ 25650 வழங்குவது போல் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தினை தமிழக அரசு வழங்கிட வேண்டும், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாத ஊதியம் ரூ 56250 வழங்குவது போல்மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,

ஊரக மற்றும் ஊராட்சி துறை மாவட்ட அலுவலகங்களில் உள்ள
கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ 58150 வழங்குவது போல் மாவட்டஒருங்கிணைப்பாளர்களுக்கும் அதே போல் ஊதியம் வழங்க வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு ஊர வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இன்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி