*விருதுநகரில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. *
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்
தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் தங்கம் இறக்குமதி வரியை மத்திய , மாநில அரசுகள் உடனடியாக குறைத்திட வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் மற்றும் தனியார் வங்கிகளில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த விஸ்வகர்மா தொழிலாளர்களை அப்ரைசராக பணியில் அமர்த்திட முன்னுரிமை வழங்கிட வேண்டும்
தமிழகத்தில் நடக்கும் தங்கம் திருட்டு வழக்கில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த விஸ்வகர்மா தொழிலாளர் களையும் சேர்த்து குற்றவாளியாக சேர்ப்பதை தடுத்து விசாரணை என்ற பெயரில் அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் கொடுமைப்படுத்துவதை தடுக்க வேண்டும் ,
உள்ளிட்ட ஐந்து அம்ச கொள்கையை வலியுறுத்தி இன்று விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 30-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்