விருதுநகர்: ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது

14பார்த்தது
விருதுநகர்: ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி பெற்ற 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய். 1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன், விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ 15.07.2025 மாலை 06.00 மணி வரை பெறப்படும் எனவும், அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியதலைவர் திரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி