விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு'சீல்'
உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் மாவட்டத்தில் தடை
செய்யப்பட்ட புகையிலை, நிக்கோட்டின் கலந்த உணவு பொருட்கள் விற்கப்படுகின்றதா? என கூட்டாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை மற்றும் நரிக்குடி யூனியன் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வீரமுத்து, தர்மர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது நரிக்குடி யூனியன் பகுதியில் உச்சனேந்தல் பகுதியில் கிழவியம்மாள் என்பவரது கடை, அருப்புக்கோட்டை யூனியன் பாலவநத்தம் கிராமத்தில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை
செய்யப்பட்ட உணவு பொருட்களின் விற்பனை குறித்தோ, அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால்
94440-42322 என்ற மாநில வாட்ஸ் அப் புகார் எண்ணிற்கோ அல்லது இணையதளத்திற்கோ அல்லது உணவு பாதுகாப்பு செயலிக்கோ புகார் அளிக்கலாம், புகாரை பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.