விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்ன காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் உயிரிழந்தவர்களின் 6 பேரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் விருதுநகர் மருத்துவமனையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலை நிர்வாகம் சார்பாக வழக்கமாக வழங்கப்பட்டு வரும் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி 3வது நாளாக உடலை வாங்க மறுத்துள்ளதால் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் நிவாரணத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இறந்தவர்களின் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட பிள்ளைகளின் எதிர்கால வாழ்வாதாரத்திற்காகவே கூடுதல் நிவாரண தொகை கோருவதாக உறவினர்கள் விடுத்துள்ளனர்.