விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் ரூ. 5. 25 இலட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 21. 12. 2024 அன்று நடத்தப்பட்டு, 6131 நபர்கள் கலந்து கொண்டதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு குழுக்கள் அமைப்பதற்கு 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, 38 மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 150 குழுக்கள் விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டியில் வினாடி வினா தொடக்க நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் 40 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர்.