வேலாயுதபுரம்: குடிநீர் குழாயை சரிசெய்து தரும்படி கோரிக்கை

73பார்த்தது
வேலாயுதபுரம்: குடிநீர் குழாயை சரிசெய்து தரும்படி கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் கார்கில் நகர் மற்றும் ஜிபி நகரில் வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் நான்கு மாதங்களாக குடிநீர் வரவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு சாலை பராமரிப்பு வேலை நடைபெற்ற போது தண்ணீர் குழாய் உடைந்து விட்டது. 

இதுவரை மறுசீரமைப்பு நடைபெறவில்லை. உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தராத நிர்வாகத்தால் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  4 மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி