*சி ஆர் பி எப் படையின் பெண் காவலர்கள் 3040 கிலோமீட்டர் இரு சக்கர வாகன பேரணி விருதுநகர் வந்தடைந்தது ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் வரவேற்பளித்தனர்*
இந்தியாவின் மிகப்பெரிய துணை இராணுவ படை பிரிவான சி ஆர் பி எஃப் படையில் பணிபுரியும் பெண் காவலர்கள் இந்திய தேசிய ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கன்னியாகுமரி முதல் குஜராத் வரை 3040 கிலோமீட்டர் இருசக்கர வாகன பேரணி மேற்கொள்கின்றனர் 3040 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நேற்று கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி இன்று விருதுநகர் வந்தடைந்தனர் விருதுநகர் வந்தடைந்த அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் வரவேற்பு அளித்த அவர்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்தி வழி அனுப்பினர்.