*விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- இருவர் உயிரிழப்பு மூன்று பேர் படுகாயம்*
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் சிவகாசியை சேர்ந்த ராஜசந்திர சேகரன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. இதில் அந்த அறையில் பணி செய்து கொண்டிருந்த கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (58), கண்டியணேந்தல் கருப்பையா (35) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும்
மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் மேலும் வெடிவிபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். விபத்து குறித்து காரியாபட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.