சிவகாமி அம்மையாரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு உதவித்தொகை திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத் துறை ஊர் நல பெண் அலுவலர்கள் இரண்டு பேரை விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
விருதுநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயமுருகன் பாண்டீஸ்வரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சிவகாமி அம்மையாரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு உதவித்தொகை திட்டத்திற்கு
சமூக நலத்துறையை சேர்ந்த ஊர் நல அலுவலர்கள் ஒண்டிப்புலியை சேர்ந்த முருகேஸ்வரி(59), ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டியை சேர்ந்த லதா வேணி(56) ஆகியோரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இத்திட்டத்திற்கு லஞ்சமாக இருவரும் மூவாயிரம் வழங்க வேண்டும் என ஜெயமுருகனிடம் கூறியுள்ளனர்.
ஜெயமுருகன் அதற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளதோடு இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லதா வேணி மற்றும் முருகேஸ்வரி ஆகியோரிடம் ரூபாய் ஆயிரம் ரூபாயை ஜெயமுருகன் வழங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.