விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா. இவர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது பாஸ்கரன் மற்றும் ஜோதிலட்சுமி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் இருவரிடம் இருந்த 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.