*கடைகளில் விதிக்கப்படும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்ததை நீக்க கோரி விருதுநகரில் வியாபார சங்கத்தினர் விழிப்புணர்வு முழு கடையடைப்பில் ஈடுபட்டனர்*
மத்திய மாநில அரசு இணைந்து ஏற்படுத்திய கடை வாடகை ஒப்பந்த தொகையின் மேல் 18 சதவீத ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் இந்த ஜிஎஸ்டி பால் வியாபாரிகள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாவதாகவும் இந்த வரி விதிப்பை மத்திய மாநில அரசுகள் நீக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று வியாபார சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விருதுநகர் வியாபார தொழிற்துறை சங்கம் மற்றும் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் விழிப்புணர்வு முழு கடையடைப்பு நடைபெற்றது. விருதுநகர் மெயின் பஜார் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மற்றும் பலசரககு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.