விருதுநகர் வட்டார பகுதிகளில், ஒரு வருடத்தில் (2024) வரை, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உத்தரவின்படியும், விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. யோகேஷ் குமார், மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர், டாக்டர். செல்வராஜ் அவர்களின் அறிவுரையின்படியும், விருதுநகர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. எஸ். அம்ஜத் இப்ராஹிம் கான், காவல்துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. சரவணன் பெண் காவலர் திருமதி. முருகேஸ்வரி ஆகியோரால், ஒரு வருடத்தில் (2024) இதுவரை (ரூபாய் இருபது லட்சம்) 20,00,000/- (01/01/2024 முதல் 31/12/2024 வரை) அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு, கருவூலம் மூலம் ஈ-சலான் (E-CHALAN) இல் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கப்பட்டு, கடந்த ஓராண்டில் மட்டும், விருதுநகர் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளில் 41 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.