*விருதுநகரில் பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பாக பால் வளத் துறை துணை ஆய்வாளரைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் - 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. *
விருதுநகர் மாவட்ட பால்வளத்துறை துணை ஆய்வாளர் சம்பத்தை கடந்த திங்கள்கிழமை அவரது அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் சென்றதாகவும்,
அப்போது பால்வளத்துறை துணை ஆய்வாளர் சம்பத் அவர்கள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இடமும் செல்போன்களை அனைத்தையும் கேரிப்பையில் போடுமாறு கட்டாயப்படுத்தியதாகவும்,
இதனை சங்கத்தின் நிர்வாகி என்ற முறையில் இது சரியில்ல என்று எடுத்துரைத்தும். பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை இரண்டு மாதங்களாக வழங்கவில்லை என்றும் பால் பணம் பட்டவரா 10 தினகளுக்கு ஒரு முறை வழங்கக்கூடியதை 40 நாட்கள் ஆகியும் இன்றும் வழங்கவில்லை என்றும் இது சம்பந்தமாக தங்களிடம் பேச வருகின்ற பொழுது தலைவர்களை ஒருமையில் பேசுவது செல்போனை புடுங்கி வைத்துக் கொள்வது போன்ற செயல் சரி அல்ல என்று வலியுறுத்தி
இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால்வத்துறை சங்கம் சார்பாக இன்று பால்வளத்துறை துணை ஆய்வாளர் சம்பத் அவர்களின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்