விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இரண்டாவது பட்டமேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பட்டப்படிப்பு முடித்த 296 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார். இந்த பட்டம் ஏற்பு விழாவின்போது பட்டம் முடித்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரை அவரது நண்பர்கள் இருவர் தங்கள் கைகளால் சுமந்து சென்று அமைச்சரிடம் பட்டம் பெற செய்தனர். இது அங்கு நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,
தற்போது அனைத்திலும் பெண் பிள்ளைகள் தான் முன்னணியில் உள்ளனர். மாணவர்கள் அவர்களுடன் போட்டி போட முடிவதில்லை. மாணவர்கள் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இருவரும் சரிசமம் தான் இருவரும் முன்னேறி வரவேண்டும். இந்த கல்லூரிக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என முதல்வர் என்னிடம் மனு அளித்துள்ளார். தேவையான அனைத்தையும் உரிய நேரத்தில் செய்து தருவேன் என பேசினார்.