விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கம் 2024-25 என்ற திட்டத்தின் கீழ்; ரூ. 99.51 இலட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை 17 விவசாயிகளுக்கு ரூ. 52 இலட்சம் மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். அதன்படி, இன்று 10 டிராக்டர்கள், 4 பவர்டில்லர்கள், 3 பவர் வீலர்கள் என மொத்தம் 17 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
பின்னர், வேளாண் பொறியியல் துறை மூலம் நடத்தப்பட்ட "சூரிய மின்சக்தி ஆற்றலும் காலநிலை மாற்றமும்" என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் மதுரை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.