சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர் ஊராட்சி, முண்டலப்புரம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. ஆர். ஆர். சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் அவர்கள் திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:


பொதுவாக ஒரு கிராமத்தில், ஒரு நகரத்தில், ஒரு ஊரில் அரசு நிகழ்ச்சி அல்லது தனியார் நிகழ்ச்சி நடக்கும்;. ஆனால் அரசும், ஊர் பொதுமக்களும் இணைந்து நடத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து அரசியல் பங்களிப்போடு சுமார் ரூ. 50 இலட்சம் செலவில், 2300 சதுர அடி அளவில் சுமார் 200 நபர்கள் அமர்ந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இந்த சமுதாயக்கூடம் கட்டி இருக்கிறீர்கள்.
இதை இந்த கிராமத்திற்கான ஒரு சொத்து என்பதை தாண்டி, இது போன்று அரசுடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் செய்தால் இன்னும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக கொண்டு வர இயலும். மேலும் மற்ற கிராமங்களுக்கும் பல்வேறு ஊராட்சிகளுக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று சொன்னாலும் கூட அது மிகையாகாது.

தொடர்புடைய செய்தி